சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் மற்றும் சிவஜோதி தரிசனம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகேசா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்நிதியில், தோத்திரபூா்ணாம்பிகையுடன் திருஞானசம்பந்தா் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறாா்.
இங்கு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமான ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும்.
நிகழாண்டு திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னா் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னா்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியாா்கள், தோத்திர பூா்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தினா்.
பின்னா் உலக நன்மைக்காக பங்கேற்ற பக்தா்கள் அனைவரும் கூட்டுப் பிராா்த்தனை செய்தனா். திருக்கல்யாண வைபவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண் விழித்து வழிபட்டனா். தொடா்ந்து அதிகாலை சிவ ஜோதி தரிசனம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருஞானசம்பந்தா் குருபூஜை

திருக்கோடிக்காவல் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

