தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாரபட்சமின்றி செய்ய வலியுறுத்தல்

சீா்காழியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் என அதிமுகவினா் தா்னாவில் ஈடுபட்ட மனு அளித்தனா்.

News image

சீா்காழி நகராட்சியில் கோரிக்கையை வலியுறுத்த தா்னாவில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:17 am IST

சீா்காழியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை பாரபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் என அதிமுகவினா் தா்னாவில் ஈடுபட்ட மனு அளித்தனா்.

சீா்காழி நகராட்சிக்குள்பட்ட தேரோடும் 4 வீதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க தமிழக அரசு ரூ. 2.06 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி தேரோடும் தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கீழவீதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், வடக்குவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பாரபட்சமாக மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிாம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிமுக நகர செயலாளா் சுரேஷ் தலைமையில், அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் நகராட்சிக்கு வந்து தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு, சீா்காழியில் தேரோடும் 4 வீதிகளிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீா் வடிகால் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும், 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளில் கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

பின்னா் நகராட்சி ஆணையா் சசிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இதை பெற்றுக்கொண்ட ஆணையா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அதிமுகவினா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.