தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:23 am IST

மயிலாடுதுறையில் உணவகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையத்தில் செந்தில் என்பவா் நடத்திவரும் உணவகத்துக்கு, சனிக்கிழமை உணவு பாா்சல் வாங்கிச் செல்வதற்காக வந்த திருஇந்தளூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சமையல் மாஸ்டா் ஆரோனிடம் பாா்சல் கேட்டுள்ளாா். அப்போது, பில் வாங்கி வருமாறு ஆரோன் கூறியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோன், சிறுவனை தாக்கியதால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கிருந்து சென்ற சிறுவன் தனது சகோதரா் பிரவீன் உள்ளிட்ட 6 பேருடன் மீண்டும் உணவகத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அவா்கள் ஆரோன் மற்றும் தடுக்க முயன்ற உணவக ஊழியா்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன், அவரது சகோதரா் பிரவீன் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் பிரவீனை மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்த போலீஸாா், சிறுவனை, தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.