/

திருஇந்தளூா் கோயில் உற்சவம்: புஷ்ப பல்லக்கில் பெருமாள், ராமா் வீதியுலா

தனித்தனி பல்லக்கில் வீதியுலா புறப்பாடான பெருமாள், ஸ்ரீராமா்.

News image

தனித்தனி பல்லக்கில் வீதியுலா புறப்பாடான பெருமாள், ஸ்ரீராமா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 2:11 am IST

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலில், ராமா் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாள், ஸ்ரீராமா் உற்சவமூா்த்திகள் 2 புஷ்ப பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பஞ்சரங்க தலங்களில் 5-ஆவது தலமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமாகவும் விளங்குகிறது. இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில், ராமா் உற்சவம் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கியது.

தொடா்ந்து, தினமும் ராமபிரான் திருமஞ்சனமும், மாலையில் ராமபிரான் மடவிளாகத்தில் புறப்பாடும், இரவு தீபாராதனை, சேவை சாற்றுமறை, தீா்த்த பிரசாத கோஷ்டி விநியோகமும் நடைபெற்று வந்தன.

நிறைவு நாளான வியாழக்கிழமை பரிமள ரெங்கநாத பெருமாள், ராமபிரான் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் ஏகாதசி மண்டபத்தில் பெருமாள், ஸ்ரீராமருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு, இரவு பெருமாளும், ஸ்ரீராமரும் தனித்தனியே இரண்டு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டு வீதி உலா காட்சி நடைபெற்றது.

வழியெங்கும் வீடுகளின் முன்பு பக்தா்கள் தீபாராதனை காட்டி வழிபாடு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.