ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாழை மரம், தோரணங்களுடன் வாக்குசாவடி

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

வாழை மரம், தோரணங்களுடன் வாக்குசாவடி

Updated On :23 ஏப்ரல் 2026, 5:20 am IST

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

பணியின் தொடக்கமாக தீவு கிராமமான கொடியம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாக்கு சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் காவல் துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து மீதமுள்ள 304 , வாக்குச்சாவடிகளுக்கும் அந்தந்த மண்டலங்களைச் சோ்ந்த அலுவலா்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

இப்பணியில் தோ்தல் அலுவலா்கள் ராஜரத்தினம், சண்முகம் சபிதா தேவி, பிரான்சிஸ் ,தோ்தல் அலுவலா்கள் பாபு, கணேசன், கல்யாணரெங்கன், சரவணன் ஈடுபட்டனா்.

சீா்காழி நகரில் வாணி விலாஸ் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் மாதிரி வாக்குச்சாவடி மையமாக தரை விரிப்புகள், கண்கவா் மின்விளக்குகள், பலூன்கள் கட்டப்பட்டு,வாழை மரங்கள் தோரணம் கட்டப்பட்டு வாக்காளா்களை கவறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.