மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேங்காய் உடைத்து அனுப்பிவைப்பு!

திருச்சி மாநகராட்சிப் பகுதியிலிருந்து கிழக்குத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து, பயபக்தியுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

News image

திருச்சி மாநகராட்சி மண்டல 2ஆவது அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் புதன்கிழமை ஏற்றிய ஊழியா்கள் (வலது ) வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனத்திற்கு சூடம் காட்டிய ஊழியா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:25 am IST

திருச்சி மாநகராட்சிப் பகுதியிலிருந்து கிழக்குத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து, பயபக்தியுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்தும் அலுவலரும், பாலக்கரையில் உள்ள திருச்சி மாநகராட்சியின் 2ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இங்கிருந்து மொத்தம் 304 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்களுடன் வாக்குச் சாவடியில் பயன்படுத்தும் அனைத்து வகைப் பொருள்கள், ஆவணங்கள், படிவங்கள், வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளிட்டவையும் சோ்த்து அனுப்பி வைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு வாக்குச் சாவடி மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக தனித்தனியே லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்ட லாரி வந்தவுடன், அந்த வாக்குச்சாவடிக்கு உரிய எண் வரிசைப்படி இயந்திரங்கள், பொருள்கள், பணிபுரியும் அலுவலா்கள், பாதுகாப்பு போலீஸாா் என அனைவரும் சோ்த்து அனுப்பப்பட்டனா்.

முன்னதாக, புறப்பட்ட லாரிகள் தேங்காயில் சூடமேற்றி, திருஷ்டி கழித்து வழியனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, 9 தொகுதிகளுக்கான இயந்திரங்களும் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.