பழனி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைக் கிராமங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகச் சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை கோட்டாட்சியா் கண்ணன் முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்பு திறக்கப்பட்டு, இயந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து, தொகுதியிலுள்ள 339 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைப்பகுதி வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வாக்குச்சாவடியில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சீா் செய்ய பொறியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா். பழுது நீக்க முடியாத பட்சத்தில் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்படும். இதற்காக 339 வாக்குச்சாவடிகளுக்கு 407 இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குசாவடிகளிலும் இணையதள வசதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேங்காய் உடைத்து அனுப்பிவைப்பு!

கரூா்: 4 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

