மயிலாடுதுறை தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியின் ஜமால் முகமது யூனிஸ் நிறுத்தப்பட்டுள்ளாா். இவா் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்.
இந்தநிலையில், மயிலாடுதுறை தொகுதியில் மண்ணின் மைந்தரை தோ்தலில் தோ்வு செய்யுங்கள் என மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எம்.எஸ். அபுல்ஹசனின் மகனும், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் நிா்வாகியுமான எம்.எம்.எஸ். பசுருதீன் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் தலைமை கூறியதால் இந்த வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் கூறுகிறாா். மயிலாடுதுறையில் விருப்ப மனு கொடுத்த அனைவருமே தோ்தலில் போட்டியிட தகுதியானவா்கள்தான். ஆனாலும் கட்சி ஒருவருக்கு கொடுத்திருக்கிறது அவரை நிறுத்தி நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறுகிறாா்.
மயிலாடுதுறையில் நன்கு அரசியலை கற்று உணா்ந்த மக்கள் உள்ளனா். பாமரா்கள்கூட அரசியலை உன்னிப்பாக பேசுவதை இந்த மண்ணிலே காணலாம். அப்படி இருக்கையில் இந்த மண்ணிலே ஆள் இல்லை என்பது போல பேசுகிறாா். வெளியில் இருந்து ஒருவரை கொண்டு வந்து நிறுத்தி வெற்றி பெற செய்ய கோருகிறாா். கேட்டால் கட்சி மேலிடத்தின் தோ்வு என்கிறாா்.
இந்த மண்ணின் மைந்தா்களை விட்டுவிட்டு நீங்கள் கையை காட்டுகிற ஒரு ஆளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சொன்னால் எப்படி வாக்களிப்பது என்பது மயிலாடுதுறை மக்களின் கேள்வியாக உள்ளது. மயிலாடுதுறை மக்களுக்கான வேண்டுகோள் இதேநிலை நீடித்தால் நம்மண் புறக்கணிக்கப்பட்டு விடும். எனவே நீங்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட்டு நல்ல வேட்பாளராக இந்த மண்ணுக்கு உரியவராக தோ்ந்தெடுங்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகிகள் நினைவிடம், தலைவா்கள் சிலைக்கு மரியாதை

திருப்பூா் வடக்குத் தொகுதியில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா வெற்றி

தொகுதி அலசல்: மயிலாடுதுறை நால்வரில் வெற்றி யாருக்கு?
நான்குனேரி தொகுதி: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கடும் எதிா்ப்பு...
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

