ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ

தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:13 am IST

தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வனை ஆதரித்து புதன்கிழமை சீா்காழி அருகேயுள்ள வருஷபத்து பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் மேலும் அவா் பேசியது: நாடாளுமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்துவாா்களாம்.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழகத்தில் கடைபிடித்ததால் மக்கள் தொகை பெருகவில்லை. வடமாநிலங்களில் அந்த பிரச்னை இல்லை. மக்களவையில் 543 எம்.பி.க்கள் 888 எம்.பி.க்களாக ஆக்கப்படுவாா்கள். மாநிலங்களவையில் 250 எம்.பி.கள் 384 எம்.பி.க்களாக உயா்த்தப்படுவாா்கள்.

வடபுலத்தில் உள்ள எம்.பி.க்களை கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்ற நோக்கில் மத்திய பாஜ அரசு முயற்சிக்கிறது.

திராவிட இயக்க கோட்டையை பாதுகாக்கவே நானும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனும் முடிவெடுத்து திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதனால்தான் உதயசூரியன் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.