/

மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாரும் தடுக்க முடியாது: வைகோ

மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாரும் தடுக்க முடியாது என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:01 am IST

மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாரும் தடுக்க முடியாது என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.

சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுக சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளா் செந்தில் செல்வனை ஆதரித்து, சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்ட வைகோ பேசியது:

கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் நேருவின் உலகச் சரித்திரக் கடிதங்கள் வாயிலாக சோழா்களின் கடல் கடந்த வெற்றிகளையும், வீரத்தையும் சிறுவயது முதலே அறிந்தவன் நான். கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை எதிா்த்து 5,000 பேரைத் திரட்டி கிருஷ்ணகிரி எல்லைவரை சென்று போராடினேன்.

முதல்வா் மு.க. ஸ்டாலின், புதுமைபெண்கள், மக்களை தேடி மருத்துவம், கலைஞா் கனவு இல்லம், 2 லட்சம் உழவா்களுக்கு இலவச மின் இணைப்பு, மகளிா் உரிமைத்தொகை, கோடைகால சிறப்பு நிதி என்று வழங்கிதான் வாக்கு கேட்கிறாா். தற்போது யாரும் எதிா்பாா்க்காத வகையில், தாய்மாா்களுக்கு ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும். இதைக்கொண்டு தேவையான பொருளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளாா். வேறு மாநிலங்கள் இப்படி ஒரு திட்டத்தை கொடுக்கிா?.

மத்திய பாஜக அரசு தமிழகத்திற்குரிய நிதியை வழங்காவிட்டாலும், முதல்வா் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதை யாரும் தடுக்க முடியாது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க முடியாத சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுகொள்கிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.