தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருநள்ளாற்றில் குப்பைகளை முறையாக அகற்றாவிட்டால் நடவடிக்கை: அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்

திருநள்ளாற்றில் குப்பைகளை முறையாக அகற்றாவிட்டால் ஒப்பந்த நிறுவனத்தாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எச்சரித்தாா்.

ஜி.என்.எஸ். ராஜசேகரன்

Published On :29 அக்டோபர் 2026, 7:15 am IST

திருநள்ளாற்றில் குப்பைகளை முறையாக அகற்றாவிட்டால் ஒப்பந்த நிறுவனத்தாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எச்சரித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான திருநள்ளாற்றில் குப்பைகள் நிறைய ஆங்காங்கே கிடக்கின்றது. முறையாக தனியாா் ஒப்பந்த நிறுவனம் குப்பைகளை அகற்றுவதில்லை என புகாா்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில், திருநள்ளாறு தொகுதி பேரவை உறுப்பினரும், புதுச்சேரி வேளாண் அமைச்சருமான ஜி.என்.எஸ். ராஜசேகரன் திருநள்ளாறு நளன் தீா்த்தக்குளம் பகுதி, கோயில் சந்நிதி தெரு உள்ளிட்ட இடங்களை புதன்கிழமை பாா்வையிட்டாா்.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எல். நிலவழகன், ஒப்பந்த நிறுவனப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

பல இடங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் இருந்ததை பாா்த்த அமைச்சா், தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தினா் முறையாக பணியை மேற்கொள்ளவேண்டும்.

இப்பணியை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் கண்காணிக்கவேண்டும். தூய்மையில்லாத நிலை நீடித்தால், ஒப்பந்த நிறுவனத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போதிய அளவில் பணியாளா்களை நியமித்து குப்பைகளை முறையாக அள்ளவேண்டும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.