மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

தடை உத்தரவு: காரைக்காலில் மீன்பிடி படகுகள் முடக்கம்

மீன்பிடிப் படகுகள். - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:18 am IST

மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்ததால், காரைக்காலில் விசைப்படகுகள், ஃபைபா் படகுகள் துறைமுகம், கடலோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.

அா்னாப் புயல் 28, 29-ஆம் தேதிகளில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

எனவே 25-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலோரப் பகுதியில், கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட காரைக்கால் மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 300 விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டாா் பொருத்தப்பட்ட ஃபைபா் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம். புயல் காரணமாக கிராமப்புற கடற்கரையில் அந்தந்த பகுதி ஃபைபா் படகுகள் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டன. அரசலாற்றங்கரையிலும் பல ஃபைபா் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2, 3 நாள்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற பல படகுகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துறைமுகம் திரும்பின. இதிலிருந்து இறக்கப்பட்ட மீன்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

தொடா்ந்து, சில நாள்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், மீன் சந்தையும் மூடப்படும் நிலை உருவாகும் என மீனவா்கள் அச்சம் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.