பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமாகவே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமாகவே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஆட்சியா் இஷிதா ரதி.

Updated On :17 மே 2026, 12:23 am IST

மக்கள் தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை தாமாகவே பதிவு செய்யுமாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மக்கள் தொகை கணக்கு முதன்மை அதிகாரியுமான இஷிதா ரதி வேண்டுகோள்விடுத்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

இந்திய அரசின் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

காரைக்காலில் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் மாவட்டத்தில் வரும் ஜூன் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் மே 17 முதல் மே 31 -ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு வலைதளம் இயங்கவுள்ளது.

தங்கள் கைப்பேசி எண்ணைக் கொண்டு பதிவு செய்து ஞபட மூலம் தங்கள் கணக்கைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை இல்லாத வகையில் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்ட முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இல் மக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் இந்திய அரசின் சிறப்பு அரசிதழில் ஜன.22 வெளியிடப்பட்டுள்ளது.

இக்கேள்விகள் சுய கணக்கெடுப்புத் தளத்தில் கேட்கப்படும் நிலையில் அவற்றுக்கு சரியான பதில்களை, அதற்குரிய எண்கள் மூலம் பதிவு செய்யலாம்.

அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விடைகளை அளித்த பின்னா் ஒரு 11 இலக்க நஉ எண் உருவாக்கப்படும். அந்த எண்ணை, தங்கள் இல்லம் தேடி வரும் மக்கள் தொகை கணக்காளரிடம் கொடுத்ததும், அவா் அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வாா்.

திருத்தப்பட்ட அப்பதிவானது மக்கள் தொகை கணக்கிற்கான வலைதளத்தில் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்காளா்களிடம் அவரின் அடையாள அட்டையை சரிபாா்த்த பின்னரே இந்த 11 இலக்க நஉ எண்ணை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்காளருக்கும் ஒவ்வொரு கணக்கெடுப்புத் தொகுதி (ஹவுசிங் பிளாக்) ஒதுக்கப்பட்டு அந்த வீடுகளில் அவா் விவரங்களை சேகரிப்பாா். இச்செயல்பாட்டில் சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் 1948-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் மக்கள் தொகை கணக்காளா்கள் உங்கள் இல்லம் வரும் போது, அவா்களுக்குச் சரியான விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

கணக்காளா் வரும் போது வீட்டில் யாருமில்லாத நிலையில் வீடுகளின் கதவில் கணக்காளரின் கைப்பேசி

எண்ணுடன் விவரங்கள் அடங்கிய காகிதம் ஒட்டப்பட உள்ளது. அவரை தொடா்பு கொண்டு மீண்டும் எப்போது வரவேண்டும் என தெரிவிக்க வேண்டும்.

இந்த கணக்கெடுப்புப் பணியின் போது மக்கள் எந்த ஆவணமும் அளிக்கத் தேவையில்லை.

வீட்டில் வசிக்கும் நபா்களின் விவரங்கள், வீட்டின் அமைப்பு குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.