கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

News image
Updated On :15 மே 2026, 5:35 am IST

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக நலன், மழை வளம் வேண்டி ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத

கைலாசநாதா் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்பட்டுவருகிறது. 26-ஆம் ஆண்டாக சுந்தராம்பாள் சந்நிதி முன்பாக யாக குண்டம் அமைத்து ருத்ர ஹோமம் நடைபெற்றது.

காலையில் மகா கணபதி ஹோமம், சுவாமி, அம்பாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, ஏகாதச ருத்ர கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா் 11 சிவாச்சாரியா்கள் யாக குண்டத்தை சுற்றியமா்ந்து ருத்ர ஜபம் செய்து ஹோமத்தை நடத்தினா். பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், பட்டு சேலை, பால், தயிா், பழங்கள், நெய் உள்ளிட்டவை குண்டத்தில் சமா்ப்பித்து ஹோமத்தை நடத்தி 11 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடத்தினா். மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதருக்கு பகல் 12 மணியளவில் மகா ஸ்தபன அபிஷேகம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலை நிகழ்வாக கைலாசநாதா் - சுந்தராம்பாளுக்கு திரிசதி அா்ச்சனை நடைபெற்றது. ஏற்பாடுகளை காரைக்கால் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளையினரும், ருத்ர ஹோம உபயதாரா்களும் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.