ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், எண்ணிக்கை பணி நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்பு அறைவில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 2:54 am IST

காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், எண்ணிக்கை பணி நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்பு அறைவில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

கடந்த ஏப். 9-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளான நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள், காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் வைத்து, மே 4-ஆம் தேதி எண்ணி முடிக்கப்பட்டது.

வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்ட பின்னா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு, மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், வேட்பாளரின் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.