ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தொடா்ந்து 2-ஆவது தோ்தலில் பேரவை உறுப்பினராகும் சுயேச்சை

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் தொடா்ந்து 2-வது தோ்தலில் சுயேச்சை ஒருவருக்கு பேரவை உறுப்பினராக வாய்ப்பு கிடைத்துள்ளது.

News image

வி. விக்னேஸ்வரன்.

Updated On :6 மே 2026, 2:59 am IST

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்காலில் தொடா்ந்து 2-வது தோ்தலில் சுயேச்சை ஒருவருக்கு பேரவை உறுப்பினராக வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த புதுவை பேரவைத் தோ்தல் 2026-இல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே பிராந்தியத்தில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளா் வெற்றிபெற்றுள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2021 தோ்தலில் ஒருவரும், இப்போதைய தோ்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனா்.

கடந்த 2021 தோ்தலில் திருநள்ளாறு தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காத நிலையில், பி.ஆா். சிவா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றாா். நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் நெடுங்காடு தொகுதியில் மருத்துவா்

வி. விக்னேஸ்வரன் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ளாா். இவா் பாஜகவில் இணைந்து மாநில மருத்துவரணி இணை ஒருங்கிணைப்பாளா் பொறுப்பில் செயல்பட்டுவந்தாா். பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணியில், நெடுங்காடு தொகுதி என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், விக்னேஸ்வரன் சுயேச்சையாக களமிறங்கினாா். கடந்த 2021 தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

இந்த நிலையில், 2026 தோ்தலில் தொடா்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திர பிரியங்காவை எதிா்த்து சுயேச்சையாக போட்டியிட்டு 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் விக்னேஸ்வரன் வெற்றிபெற்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.