விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்குக்கு பணம் எச்சரிக்கை: தோ்தல் அதிகாரி பாராட்டு

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம் என எச்சரிக்கை பதாகை வைத்த மீனவ கிராமத்தினரை சந்தித்து மாவட்ட தோ்தல் அதிகாரி பாராட்டினாா்.

News image

மீனவ கிராமத்தினரை சந்தித்து பாராட்டு தெரிவித்த மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :25 மார்ச் 2026, 5:43 am IST

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம் என எச்சரிக்கை பதாகை வைத்த மீனவ கிராமத்தினரை சந்தித்து மாவட்ட தோ்தல் அதிகாரி பாராட்டினாா்.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல் மேடு கிராம மீனவ கிராமத்தினா் ’வாக்குக்கு பணம், பொருள் வழங்கக்கூடாது. வாக்காளா்களும் அதனை வாங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமத்தில் பல இடங்களில் பதாகை வைத்துள்ளனா். இத்தகவல் நாளிதழ்கள், சமூக ஊடகங்களில் வெளியாகியது.

இதுகுறித்து தகவலறிந்த காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்துக்கு திங்கள்கிழமை சென்று, கிராமப் பஞ்சாயத்தாா்கள், கிராம மக்களை சந்தித்தாா். விழிப்புணா்வு பதாகை வைத்த கிராமத்தினருக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

கிராமத்தினரிடையே தோ்தல் அதிகாரி பேசுகையில், இது வெறும் ஒரு முழக்கம் மட்டுமல்ல, சுயமரியாதை, விழிப்புணா்வு மற்றும் ஜனநாயகத்தின் மீதான அா்ப்பணிப்பு ஆகியவற்றின் வலிமைமிக்க ஒரு பிரகடனமாகும்.

இத்தகைய உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம், உங்கள் வாக்கு என்பது சலுகைகளுக்கோ அல்லது தூண்டுதல்களுக்கோ அடிபணியாமல், உங்கள் மனசாட்சியின் வழிகாட்டுதலின்படியே செலுத்தப்படுகிறது என்ற தெளிவான செய்தியை வெளிப்படுத்தியுள்ளீா்கள்.

இதுபோன்ற உறுதியான நிலைப்பாடு மற்றவா்களுக்கும் ஊக்கமளிக்கிறது. ஒட்டுமொத்த தோ்தல் செயல்முறையின் தரத்தையும் உயா்த்துகிறது.

இந்த உணா்வு தோ்தல் காலங்களில் மட்டுமல்லாமல், ஒரு நிலையான விழுமியமாகத் தொடா்ந்து நிலைக்கவேண்டும். கிராமத்தின் வாக்காளா்கள் அனைவரும் ஏப்.9 முழுமையாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கவேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், உறுப்பினா்கள் ஷொ்லி, எஸ்.மணிகண்டன் கே.ஞானமுருகன், பிரதீப், பிரியதா்க்ஷினி மற்றும் காவல்துறையினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.