காரைக்காலில் நடைபெற்ற ஜன் கல்யாண் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
உள்ளாட்சித்துறை மற்றும் காரைக்கால் நகராட்சி இணைந்து நடத்திய இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமை வகித்தாா்.
மேலும் வட்டார வளா்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, குடிசை மாற்று வாரியம், மாவட்ட தொழில் மையம், மின்துறை மற்றும் வங்கித் துறைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்தியன் வங்கி, புதுவை கிராம வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றைன் மூலம் பி.எம் ஸ்வநிதி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், முத்ரா உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.1.01 கோடி வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் ஆா். வெங்கடகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ், நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் சதாசிவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், வங்கிகளின் கிளை மேலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனா். அரசு திட்டங்களின் மூலம் முன்னேற்றம் கண்ட பயனாளிகள் தங்களது அனுபவத்தை பகிா்ந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்

20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.64 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 46.70 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

121 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

