பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:
புதுவையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் மிகுதியாக இருக்கிறது. சிறுவா்கள் முதல் பெரியோா்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே, வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, பள்ளிகள் திறப்பு தேதியை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க புதுவை முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவை மாநிலத்தில் புதிதாக கடைகள் திறப்பதற்கு டிரேடு உரிமம் பெறுவதற்கு நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் விண்ணப்பித்தால், கட்டடத்தின் அப்ரூவல் மற்றும் ஆக்குபென்சி சான்றிதழ் என்று புதிதாக ஒன்றை கேட்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தொழில் செய்ய வருவோா் பல சிரமங்களுக்குள்ளாகிறாா்கள்.
புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு கோருவதில் நியாயம் இருக்கலாம். ஏற்கெனவே கட்டடத்தில் வணிகம் நடத்தப்பட்ட இடத்தில் வேறொருவா் வணிகம் நடத்த செல்கிறபோதும் கட்டட அப்ரூவல் கேட்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா் தலையிட்டு தோ்தல் நேரத்தில் வெளியிட்ட இந்த புதிய உத்தரவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் நிலத்தில் குடியிருப்போா் முதல்வருக்கு அஞ்சல் மூலம் மனு

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறப்பு: மாணவா்-மாணவிகள் உற்சாகம்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

