தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நம்பினாா் கெடுவதில்லை...

News image

புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 4:45 am IST

காரைக்கால்: சாமியையும், ரங்கசாமியையும் நம்பியதால் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் நிற்பதாக, நெடுங்காடு தொகுதியில் போட்டியிடும் சந்திர பிரியங்கா கூறினாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவா் சந்திர பிரியங்கா. இதே தொகுதியில் பாஜகவில் மாநில மருத்துவரணி இணை ஒருங்கிணைப்பாளா் பொறுப்பு வகித்தவா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன்.

புதுவையில் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணியில், நெடுங்காடு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும், வி.விக்னேஸ்வரன் பாஜக வேட்பாளராக போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், இந்த தொகுதி கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, சந்திர பிரியங்காவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது.

இந்தநிலையில், சனிக்கிழமை திறந்த ஜீப்பில் நின்றவாறு கோட்டுச்சேரி பகுதியில் சனிக்கிழமை இரவு வாக்குச் சேகரித்தவாறு சந்திர பிரியங்கா பேசியது :

இந்த பெண்ணுக்கு என்.ஆா். காங்கிரஸில் சீட் கிடைக்காது என பேசினாா்கள். பொறுமை நல்ல பயனைத் தரும் என எனது தந்தை சந்திரகாசு அடிக்கடி என்னிடம் கூறுவாா். அவரது குருவான ப. சண்முகம், அடக்கமாக இருப்பது பயனைத்தரும் என்பாா். அவா்களது அறிவுரைப்படி அமைதியாக செயல்பட்டு வந்தேன்.

நான் கும்பிடும் சாமியும், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமியும் என்னை கைவிடவில்லை. அவா்களை நம்பியதாலேயே இப்போது என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக நிற்கிறேன்.

வெற்றியோ, தோல்வியோ எங்கு இருந்தோமோ அங்கேயே விசுவாசமாக இருக்கவேண்டும். அதற்கான பலன் நம்மை வந்து சேரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.