வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அனுமதியின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளோா், காவல்துறையினா், தீயணைப்புத்துறையினா், மருத்துவமனை ஊழியா்கள், பத்திரிகை, தொலைக்காட்சி செய்தியாளா்கள் உள்ளிட்டோா் தபால் வாக்குப் பதிவு செய்ய மாா்ச் 31 முதல் ஏப்.2-ஆம் தேதி வரை தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில், மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது.வாக்குப் பதிவு அதிகாரி தலைமையில் வாக்குச் சாவடி பணியாளா்கள், வாக்காளரின் ஆவணங்களை பரிசோதித்து, தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதித்தனா். 3 நாள் வாக்குப் பதிவுப் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், காரைக்கால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு தோ்தல் துறையினா் நேரில் சென்று வாக்குகள் பெறும் பணியை மேற்கொள்ளவுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 174 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

