அகில இந்தியா சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா் (படம்).
அகில இந்திய சிவில் சா்வீஸ் கலை நிகழ்ச்சிப் போட்டி (ஏஐசிஎஸ்) கடந்த மாா்ச் 20 முதல் 25-ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற்றது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா். புதுவை மாநிலம் சாா்பில், காரைக்காலைச் சோ்ந்த திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப. முருகன்
நாட்டுப்புற தனி நடனம் மற்றும் தனி பாடல் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்றாா்.
மேலும் காரைக்காலைச் சோ்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் செல்வம், ஆரோக்கியராஜ், சந்திரமணி ஆகியோா் போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றனா்.
பதக்கம், சான்றிதழ் பெற்றவா்கள் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்தனா்.
அவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு, வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்வில் மேல்நிலை கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி விஜயராணி ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கடற்கரை கையுந்து பந்து போட்டி: குமுதா பள்ளி மாணவிக்கு தங்கப் பதக்கம்

அகில இந்திய கராத்தே போட்டி: சங்கரா பல்கலை. மாணவருக்கு தங்கம்

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

