மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; யாருக்கும் காயமில்லை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை பட்டாசு ஆலையில் லேசான வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தீ - பிரதிப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:04 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை பட்டாசு ஆலையில் லேசான வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

சிவகாசி வேலாயுதம்சாலை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (54)என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகே நதிக்குடியில் உள்ளது. இந்த ஆலையில் உள்ள ஒரு அறையில் பேன்சி ரகப் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மணி மருந்து உலர வைக்கப்பட்டிருந்தது. உராய்வு காரணமாக தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதில் அந்த அறை முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து தொழிலாளா்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியேறி விட்டனா். தகவலறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ பரவாமல் இருக்க தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனா். மேக மூட்டமாக இருந்ததால் தீ உடனடியாக பரவாததால் வெடிவிபத்து தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.