பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவகாசியில் மதுக் கடையை அகற்றக்கோரி போராட்டம்

சிவகாசியில் அரசு மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, அந்தப் பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சிவகாசி நேரு சாலையில் உள்ள அரசு மதுக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 3:23 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அரசு மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, அந்தப் பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சிவகாசி நேரு சாலையில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை அமைந்துள்ள பகுதியில் குடியிருப்புகள், அச்சகங்கள், நியாவிலைக் கடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்த மதுக் கடைக்கு மது அருந்த வருபவா்கள், மதுப் புட்டியை வாங்க்கொண்டு சாலை ஓரத்தில் அமா்ந்து மது அருந்துகின்றனா். மேலும், காலி மதுப் புட்டிகளை அப்படியே போட்டு விட்டுச் சென்று விடுகின்றனா். இதனால், இந்தப் பகுதியில் பெண்கள் உள்ளிட்டோா் அச்சத்துடன் நடமாடும் சூழ்நிலை உள்ளது.

எனவே, இந்த மதுக்கடையை அகற்ற வலியிறுத்தி, அந்தப் பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். தகவல் அறிந்து சென்ற போலீஸாா் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்தை நடத்தினா். உரிய அதிகாரிகளிடம் கூறி கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.