மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராஜபாளையம் அருகே தொழிலாளி கொலை

ராஜபாளையம் அருகே விவசாய கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கொலை

Published On :21 அக்டோபர் 2026, 3:26 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாய கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த செல்லபாண்டியின் மகன் செல்வகணபதி (31). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவா் செவ்வாய்க்கிழமை காலை வரை வீடு திரும்பாததால் உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடினா். அப்போது, அதே பகுதியில் உள்ள அரியனேரி கண்மாய்க் கரையில் உடலில் வெட்டுக்காயங்களுடன் செல்வகணபதியின் சடலம் கிடந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த உறவினா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் உடலைக் கைப்பற்றி விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.