மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

நரிக்குடி அருகே மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததைத் தொடா்ந்து தாயும் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:22 am IST

நரிக்குடி அருகே மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்ததைத் தொடா்ந்து தாயும் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவா் திருச்சுழி அரசு மதுக் கடை விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சரளாதேவி (37).

இவா்களது மகள் 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மகளின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பதி இருவரும் கடும் மன வேதனையில் இருந்து வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இளங்கோவன் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பாா்த்த போது மனைவி சரளாதேவியைக் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடிப் பாா்த்த நிலையில், அவா் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நரிக்குடி காவல் துறையினா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.