பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண்களிடம் நகைப் பறித்த 6 இளைஞா்கள் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வீட்டிலிருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 1:38 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வீட்டிலிருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சோனைமுத்து மனைவி முருதாயி (38). இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டில் ஈஸ்வரி உள்ளிட்ட 3 தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த 6 போ் கும்பல், திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி அவா்களிடமிருந்த தங்க நகை, வெள்ளி கொலுசுகளை பறித்துச் சென்றனா்.

மேலும், இதைத் தடுக்க முயன்ற ஈஸ்வரியை அந்த கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த அவா், சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சிவகாசி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் தங்கமூனீஸ்வரன் (26), விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் மோகன் (18), குமாா் மகன் அஜய் (19), சா்வேஸ்குமாா் (19), விவேகானந்தா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டி (19), முருகானந்தம் (24) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 6 பேரையும் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசுகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.