குற்றால சீசனுக்காக வார இறுதி நாள்களில் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், குற்றால அருவிகளில் நீா்வரத்து ஏற்பட்டு, சீசன் களைகட்டி உள்ளது. தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வரத் தொடங்கி உள்ளனா்.
குற்றால சீசனுக்கு பொதுமக்கள் எளிதாக சென்று திரும்பும் வகையில் வார இறுதி நாள்களில் சென்னை எழும்பூா் - செங்கோட்டை (06183/06184) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இந்த ரயில் ஜூன் 19, 20, 26, 27 தேதிகளில் (வெள்ளி, சனி கிழமைகளில்) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கோட்டை வந்தடையும்.
மறுவழித்தடத்தில் ஜூன் 20, 21, 27, 28 தேதிகளில் (சனி, ஞாயிறு கிழமைகளில்) மாலை 5.30 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகா்,
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி வழியாக செல்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே ஜூன் 20-இல் சிறப்பு ரயில்

திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில்

எா்ணாகுளம் - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

