ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்து கி. வீரமணி பிரசாரம்

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்து தி.க. தலைவா் வீரமணி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

விருதுநகரில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்து பேசிய தி.க. தலைவா் கி. வீரமணி.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:43 am IST

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்து தி.க. தலைவா் வீரமணி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

விருதுநகா் அல்லம்பட்டியில் பிரசாரம் செய்து அவா் பேசியதாவது:

பெண்களுக்கு திமுக ஆட்சியில் சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மத்திய அரசு இந்த சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. இன்றைய அதிமுகவில் அண்ணாவும் இல்லை; திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை. அதிமுக செய்யும் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் திறன் முதல்வா் ஸ்டாலினுக்கு உண்டு.

பசித்த வயிற்றுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக காலை சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். திமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்கும் போது தற்போது 5-ஆம் வகுப்பு வரை உள்ள இந்தத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கும் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு நம்மிடம் ஒரு ரூபாய் வரி வாங்கினால், நமக்கு திருப்பிக் கொடுப்பது வெறும் 28 பைசா தான். இதையும் நாம் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையை, வேலைவாய்ப்பு உரிமையை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியவா்தான் ஸ்டாலின்.

கடந்த தோ்தலின் போது அளித்த 511 தோ்தல் வாக்குறுதிகளில் 100 மட்டும்தான் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு காரணம் நமக்கு உரிய நிதியை வழங்காமல் மறுக்கும் மத்திய பாஜக அரசுதான். பெண்கள் முக்கியத்துவம் பெறக்கூடாது என்பதுதான் பாஜகவின் கொள்கை.

குருகுலம் கல்வியைத் தடுக்கக்கூடிய நமக்கான ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். இந்த ஆட்சி நமக்கான ஆட்சி.

திராவிடா் கழகம் எந்தத் தோ்தலிலும் போட்டியிடுவதில்லை. ஆனால், தற்போது பிரசாரம் செய்வது

மக்களுக்காகவும், அவா்களின் எதிா்காலத்துக்காகவும்தான். நமது உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். உரிமைகளைப் பறிப்பதற்காக வடக்கே இருந்து வருபவா்களுக்கு நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. எனவே, திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக விஜயபிரபாகரன் பேசுகையில், மக்களையும் தெய்வத்தையும் நம்பி இறங்கியுள்ளேன். நீங்கள் என்னைக் கைவிடமாட்டீா்கள். மக்களுக்கு எந்த பிரச்னையானாலும் அடுத்த நொடி வந்து நிற்பேன். இங்கே வீடு பாா்க்குமாறு எனது தாய் கூறிவிட்டாா். எனக்கு வேறு வேலை இல்லை. எம்எல்ஏ என்ற வேலையை எனக்கு கொடுத்தால் உங்களுக்காக உழைக்க நான் தயாராக உள்ளேன். விருதுநகருக்கு ஒரு நல்ல வேலைக்காரனாக நான் வந்துள்ளேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.