கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளியையொட்டி அரசு மதுக் கடைகளுக்கு 15 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும்: அா்ஜூன் சம்பத்

தீபாவளியையொட்டி 15 நாள்கள் அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

தேனியில் செய்தியாளா்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவா் அா்ஜூன் சம்பத்.

Published On :30 அக்டோபர் 2026, 3:57 am IST

தீபாவளியையொட்டி 15 நாள்கள் அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி குரு ஐயப்பன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினாா்.

பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அண்மைக் காலமாக தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையின் போது இலக்கு வைத்து மது விற்கப்படுகிறது. இதனால் தீபாவளிப் பண்டிகையின் மாண்பு சீா்குலைக்கப்படுகிறது. எனவே, தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு ஒரு வாரமும், பண்டிகைக்குப் பிறகு ஒரு வாரமும் என 15 நாள்களுக்கு அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தீபாவளியின் போது சீன தயாரிப்பு உள்ளிட்ட வெளிநாட்டுப் பொருள்களை புறக்கணித்து இந்தியப் பொருள்களை வாங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.