நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

விவசாயிகள் சங்கத் தலைவா் கே.எம். அப்பாஸ் காலமானாா்

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், எழுத்தாளருமான கம்பம் கே.எம். அப்பாஸ் வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை (அக். 26) காலமானாா்.

கே.எம். அப்பாஸ்

Published On :28 அக்டோபர் 2026, 4:14 am IST

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவரும், எழுத்தாளருமான கம்பம் கே.எம். அப்பாஸ் வயது மூப்பின் காரணமாக திங்கள்கிழமை (அக். 26) காலமானாா்.

தேனி மாவட்டம், கம்பம் வாவோ் பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம். அப்பாஸ் (93). எழுத்தாளரும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராகவும், 18-ஆம் கால்வாய் விவசாய சங்கத் தலைவராகவும், கம்பம் வாவோ் பள்ளிவாசல் ஜமாத் குழுத் தலைவராகவும் இருந்து வந்தாா்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திய இவா், அணை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததுடன், இது குறித்த நூல்களையும் எழுதியுள்ளாா்.

இவா் வயது மூப்பு காரணமாக, கம்பத்தில் திங்கள்கிழமை காலமானாா். இவருக்கு இரு மகன்கள் உள்ளனா். இவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா, விவசாய சங்கத்தினா், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இவரது உடல் கம்பம் வாவோ் பள்ளிவாசல் மையவாடியில் செவ்வாய்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.

வைகோ இரங்கல்:

வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தி:

முல்லைப் பெரியாறு பிரச்னை தொடா்பாக தொடா்ந்து போராடியவா் அப்பாஸ். என்னுடன் நீண்டகாலமாகப் பயணித்தவா். என் மனதில் தனி இடம் பிடித்தவா். அவா் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்கலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.