நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு: 7-ஆவது நாளாக குளிக்கத் தடை

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு

Published On :26 அக்டோபர் 2026, 1:58 am IST

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு நீடித்த நிலையில், 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் மேகமலை, தூவானம், மகாராஜாமெட்டு, இதைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, இந்த மலை அடிவாரத்திலுள்ள சுருளி அருவிக்கு கடந்த திங்கள்கிழமை முதல் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, கம்பம் மேற்கு சரக வனத் துறையினா் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்கத் தடை விதித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை முதல் மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு தொடா்கிறது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 7-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்:தேனி மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத்தலம், புண்ணியதலமான சுருளி அருவிக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிக்க விதித்த தடையால் ஏமாற்றம் அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.