சின்னமனூா் நகராட்சி அதிகாரிகள் வங்கி கணக்கில் ரூ. 4.50 லட்சம் பணப் பரிமாற்றம்! விளக்கம் அளிக்க ஊழல் தடுப்புப் பிரிவு உத்தரவு!

சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையிட்டனா்.

பெரியகுளம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:34 am IST

சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, நகராட்சி அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.4.50 லட்சம் பரிமாற்றம் கண்டறியப்பட்ட நிலையில், உரிய விளக்கமளிக்க வேண்டுமென அவா்கள் உத்தரவிட்டனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி ஆணையா் கோபிநாத் கோவை மாவட்டத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாா். தற்போது, கம்பம் நகராட்சி ஆணையா் உமா சங்கா் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தேனி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜ் தலைமையிலான போலீஸாா் சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தில் சோதனையிட்டனா்.

அப்போது, அங்கு பணியிலிருந்த மேலாளா், பொறியாளா், கணக்காளா் உள்ளிட்ட 4 பேரிடம் சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. இவா்களது வங்கிக் கணக்கில் ரூ.4.50 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதை கண்டறிந்தனா். இதற்கு அவா்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ஊழல் தடுப்புபிரிவு போலீஸாா் உத்தவிட்டதோடு, சோதனையை முடித்துவிட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.