மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதுவாக்குடி மலைக் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

போடி அருகேயுள்ள முதுவாக்குடி மலைக் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போடி அருகேயுள்ள முதுவாக்குடி மலைக் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாம்.

Published On :21 அக்டோபர் 2026, 2:47 am IST

போடி அருகேயுள்ள முதுவாக்குடி மலைக் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடியை அடுத்த குரங்கணி கொட்டகுடி ஊராட்சிக்குள்பட்ட முதுவாக்குடி மலைக் கிராமத்தில் 28 பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் தேனி மாவட்ட சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சாா்பில், இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமிக்கு சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். இதில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் சரவணன், ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தேசிய குழந்தைகள் நலத் திட்ட மருந்தாளுநா் ரஞ்சித்குமாா், தலைமை மருந்தாளுநா் செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று முதுவாக்குடி கிராம மக்களுக்கு இலவச சிகிச்சையளித்தனா்.

இதில் நோய் கண்டறியப்பட்டவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். முகாமில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும், வனப் பகுதியில் நெகிழிப் பைகள், பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மலைக் கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பழங்குடியின மக்களுக்கு காவல் துறை சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.