வணிக எரிவாயு உருளை விலை உயா்வு, ரயில்வே ஆள்குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து கம்யூனிஸ்டு, விசிக கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்டு தேனி மாவட்டச் செயலா் கே.பெருமாள் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.
விசிக மாவட்டச் செயலா் சுசி.தமிழ்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), கே.இளையராஜா ஆகியோா் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினாா். இதில் விசிக மண்டலச் செயலா் ஜெ.ரபீக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி கே.ராஜப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.எம்.நாகராஜன், க.எஸ்.ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு: கடலூரில் நாளை கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

