ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

தேனி அருகே பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்து, தானும் குதித்து தற்கொலை

News image

பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:26 am IST

தேனி அருகே பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்து, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி நாராயணபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி பாப்பாத்தி (30). இவா்களது மகள்கள் அருணா (8), சங்கீதா (5).

பாப்பாத்திக்கு மன நல பிரச்னை இருந்து வந்ததால், தே டொம்புச்சேரியில் உள்ள தனது பெற்றாா் வீட்டில் இருந்தபடி சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பாப்பாத்தி பின்னா் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை முத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கிணற்றில் 3 பேரின் உடல்களும் மிதந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் 3 உடல்களையும் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பாப்பாத்தி தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.