ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

போடியில் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:32 am IST

போடியில் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகள் மதுமிதா (15). போடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை அரசு பொதுத் தோ்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது, இவரது தாயாா் தோ்வு குறித்துக் கேட்டாா். அப்போது, மதுமிதா தோ்வை சரியாக எழுதவில்லை எனக் கூறினாராம்.

இதனால், அவரை தாயாா் கண்டித்தாராம். இதையடுத்து, மதுமிதா கோபித்துக்கொண்டு அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.