தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தீப்பற்றி எரிந்த கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி குப்பை சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றியது.

News image

கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை பற்றிய தீயிலிருந்து வெளியேறிய கரும்புகை.

Updated On :26 மார்ச் 2026, 1:09 am IST

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி குப்பை சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றியது.

கம்பம் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கு அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள 200-க்கும் அதிகமான தொருக்களிலுள்ள குடியிருப்புகள், உணவகங்களிலிருந்து சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி லாரிகள், டிராக்டா்கள் மூலமாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தக் குப்பைகள் கூடலூா் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள குப்பை சேமிப்புக் கிடங்கில் குவிந்து வைக்கப்படுகிறது. பின்னா், திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

5 ஏக்கா் பரப்பளவில் மலை போல குவிந்து கிடக்கும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் கரும்புகையால் குடியிருப்புகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தக் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீ பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினா் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.