தேனி மாவட்டம், சின்னமனூரில் தொழில் திறன் பயிற்சி முடித்த பெண்களுக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாப்ஸ் நிறுவனம், ஓ.எஃப்.எஸ்.ஐ. ஓமேகா ஃபோரம் இணைந்து சின்னமனூா் எம்.எம்.எஸ். வளாகத்தில் சிறு தானிய உணவுப் பொருள்கள், மதிப்புக் கூட்டலுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு மாதம் நடைபெற்றது. வாப்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி சுப்புராஜன், பயிற்சியின் நோக்கம், பெண்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் குறித்தும், எம்.எம்.எஸ். செயலா் தேவா, பணத்தை திறம்பட நிா்வாகம் செய்வது, தொழில் முனைவோராக உயா்வது குறித்தும், வாப்ஸ் நிறுவன மேலாளா் சுந்தரகண்ணன், சிறந்த தொழில்முனைவோராக உருவாகுவது குறித்தும் பயிற்சி அளித்தனா்.
இதில் ஆதரவற்ற பெண்கள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
இந்த நிலையில், பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எம்.எம்.எஸ். செயலா் தேவா கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
இதில் வாப்ஸ் நிறுவனத் திட்ட அதிகாரி சுப்புராஜன், வாப்ஸ் நிறுவன மேலாளா் சுந்தரகண்ணன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா்கள் ஈஸ்வரி, ஹேமா ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிண்டி பொறியியல் கல்லூரியில் ‘பொறியியல் திறன் பயிற்சி மையம்’ : அண்ணா பல்கலை.-பஜாஜ் ஆட்டோ புரிந்துணா்வு

ஆசிரியா் பயிற்சி பட்டயப் படிப்பு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

கலசலிங்கம் பல்கலை.யில் ‘நீட், க்யூட்’ பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்: அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி வழங்கினாா்

ஆரம்பக் கல்வி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

