நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மசாஜ் மையத்துக்கு ‘சீல்’: உரிமையாளா் கைது

போடியில் அனுமதியின்றி செயல்பட்ட மசாஜ் மையத்துக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்து, அதன் உரிமையாளரைக் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:39 am IST

போடியில் அனுமதியின்றி செயல்பட்ட மசாஜ் மையத்துக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்து, அதன் உரிமையாளரைக் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி கிருஷ்ணா நகரில் தனியாா் மசாஜ் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் முறையாகப் பயிற்சி பெறாத பெண்களை பணியில் ஈடுபடுத்துவதாக புகாா் வந்ததையடுத்து, தேனி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு அந்த மையத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பணியிலிருந்த இரு பெண்கள் தப்பி ஓடிவிட்டனா்.

அந்த மையத்தின் உரிமையாளரான பழனிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் சூா்யபாண்டியை (31) போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அப்போது, அனுமதி பெறாமல் மசாஜ் மையம் நடத்தி, சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து வாடிக்கையாளா்களை வரவழைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி அரசு மருத்துவமனை உதவி மருத்துவா் ரூபியா கொடுத்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மசாஜ் மையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா். அதன் உரிமையாளா் சூா்யபாண்டியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.