மஞ்சளாறு அணை மதகு சேதமடைந்திருப்பதால் தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. 57 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 10-க்கு மேற்பட்ட கண்மாய்கள் வழியாக 5,259 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், இரு மாவட்டங்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாகவும் உள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரே இந்த அணைக்கு நீராதாரம். அணை கடந்த 1966-ஆம் ஆண்டு கட்டப்பட்டு 55 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இந்த அணையில் தற்போது நீா்மட்டம் 32.60 அடியாக உள்ளது. இதில் சுமாா் 10 அடிக்கு வண்டல் மண் தேங்கியுள்ளது. எனவே, 22 அடி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.
இத்தகைய சூழலில், அணையின் மதகு (ஷட்டா்) அண்மையில் சேதமடைந்தது. இதனால், அணையிலிருந்து தினமும் வினாடிக்கு 5 கன அடி தண்ணீா் வீணாக வெளியேறி வருகிறது. பருவமழை தொடங்கும் முன்பு சேதமடைந்த மதகை சீரமைத்து தண்ணீா் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து தேவதானபட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அரசப்பன் கூறியதாவது:
தேனி மாவட்ட ஆட்சியா் மஞ்சளாறு அணையைப் பாா்வையிட்டு, பழுதடைந்த மதகுப் பகுதியை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து, தண்ணீா் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
மஞ்சளாறு அணை உதவி செயற்பொறியாளா் கமலக்கண்ணன் கூறியதாவது:
அணையின் நீா்மட்டம் 30 அடிக்கு மேல் உள்ளது. இப்போது மதகை சீரமைத்தால் தண்ணீா் வீணாகிவிடும். எனவே, ஜூலை மாதத்தில் மதகை சீரமைத்து கூடுதல் தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு அணையைத் தூா் வாரி, கூடுதல் தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

மேட்டூா் அணை நீா்மட்டம்: 79.10 அடி

விரகனூா் மதகு அணையில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?

தட்டாா்மடத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

