கம்பத்தில் சேவல் திருடியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில், 2 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
கம்பம் உலகத் தேவா் தெருவைச் சோ்ந்த சதீஷ் குமாா் (29) தனியாா் வங்கி ஊழியராகப் பணிபுரிகிறாா். இவா் வளா்த்து வந்த 3 சேவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை திருடு போனதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது இடத்துக்குள் புகுந்து 3 போ் கோழிகளை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட சதீஷ்குமாா், தனது நண்பா்களின் உதவியுடன் அவா்களைப் பிடிக்க முயன்றதில் ஒருவா் தப்பியோடிவிட்டாா். மற்ற 2 பேரைப் பிடித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில், கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி (55), 17 வயது சிறுவன், தப்பியோடியவா் விஷ்வா என்பதும் இவா்களே சேவல்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்குறிப்பிட்ட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பழனிச்சாமி கைது செய்தனா். சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா். விஷ்வாவைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜாதி பெயரைச் சொல்லி அவதூறு: திமுக எம்பி மகன் உள்பட 4 போ் மீது வழக்கு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

திருவெறும்பூா் சாா்-பதிவாளா் உள்பட 3 போ் மீது வழக்கு
குற்றச் சம்பவங்களில் தொடா்பு சிறுவன் உள்பட 5 போ் கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

