முல்லைப்பெரியாறு அணை உருவாக்கப் பின்னணி குறித்து விளக்குவதற்காக லோயா்கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் தனி ஊழியா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தேனி மாவட்டம், லோயா்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் பென்னிகுயிக்-கின் முழு உருவச் சிலை, அவா் பயன்படுத்திய இரும்புப் படகு, அவரது நாற்காலி மற்றும் அணையின் மாதிரி, பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மணிமண்டபத்தை பாா்வையிட்டுச் செல்கின்றனா். ஆனால், பென்னிகுயிக் வரலாறு, முல்லைப் பெரியாறு அணையின் உருவாக்கம் குறித்து தகவல்கள் இல்லாத நிலை இருந்து வந்தது.

இதனை முன்னிட்டு, பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம், மணிமண்டபத்தில் கல்வெட்டுகள் அமைக்கவும், பென்னிகுயிக்-கின் வாழக்கை வரலாறு பாடப்புத்தகங்களில் சோ்க்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தமிழக பொதுப்பணித் துறை சாா்பில் பாசன ஆய்வாளா் மதுசூதனன் மணிமண்டபத்தில் தனி ஊழியராக நியமிக்கப்பட்டு இங்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பென்னிகுயிக்-கின் வாழ்க்கை வரலாறு, முல்லைப் பெரியாறு அணையின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறுகிறாா். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

