ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

News image

உத்தமபாளையத்தில் சனிக்கிழமை தண்ணீா் வரத்து குறைந்ததால் வெறிச்சோடிக் காணப்பட்ட தடுப்பணை.

Updated On :26 ஏப்ரல் 2026, 12:22 am IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

முல்லைப்பெரியாறு அணையின் நீா் மட்டம் 110.20 (மொத்த உயரம் - 152) அடியாக உள்ளது. இந்த அணையின் நீரியல்படி 100 அடிக்கு மேல் தேங்கும் நீரை தமிழகப் பகுதிகளில் வெளியேற்றுவது வழக்கம். தற்போது, தேனி மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், குடிநீா்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.

இதனை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் மின் மோட்டாா்கள் மூலமாக சட்ட விரோதமாக தண்ணீா் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், உத்தமபாளையம் தடுப்பணைக்கு நீா் வரத்து சரிந்துவிட்டது மட்டுமன்றி கம்பம், கூடலூா், சின்னமனூா் நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் சுமாா் 100 கிலோ மீட்டா் ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமான முறையில் மின்மோட்டாா்கள் மூலம் குடிநீா்த் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.