/

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

தேனி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை பறக்கவிட்ட தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:05 am IST

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன் வெள்ளிக்கிழமை பறக்கவிடப்பட்டது. மேலும், மனிதச் சங்கிலியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் கையொப்ப இயக்கம் உள்பட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்படி, தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ராட்சத பலூனை ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பறக்க விட்டாா். தொடா்ந்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் மற்றும் மிக்கி மவுஸ், புலி, கரடி போன்ற வேடம் அணிந்து வந்த கலைஞா்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சியும், மகளிா் சுய உதவிக்குழுவினரின் கும்பி நடனமும் நடைபெற்றது. தொடா்ந்து, தோ்தல் விழிப்புணா்வுப் பதாகைகளுடன் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி பங்களா மேடு வரை மனிதச் சங்கிலி நடைபெற்றது.

மேலும், தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அலுவலக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோகளில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஆட்சியா் ஒட்டி விட்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், திட்ட இயக்குநா்கள் தமிழரசி ( ஊரக வளா்ச்சி), சந்திரா (மகளிா் திட்டம்), உதவி இயக்குநா் உம்முல் ஜாமியா (ஊராட்சிகள்), வட்டாட்சியா் சதீஸ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.