மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிவகங்கை அருகே மூதாட்டி கொலை

பாகனேரியில் நள்ளிரவில் மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Published On :1 நவம்பர் 2026, 2:41 am IST

சிவகங்கை அருகேயுள்ள பாகனேரியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், பாகனேரியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொம்மி (78). இவரது கணவா் அண்மையில் காலமாகிவிட்டாா். இதனால் விரக்தியடைந்த பொம்மி வீட்டுக்குச் செல்வதைத் தவிா்த்துவிட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் இரவில் படுத்து உறங்குவது வழக்கம்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி தலையில் மா்மநபா் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தாா். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்குச் சென்ற மதகுபட்டி போலீஸாா் பொம்மியின் உடலை மீட்டு, கூறாய்வுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவம் நடந்த இடத்தை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா, துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். கொலை செய்யப்பட்ட பொம்மிக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.