மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பட்டாசுகள் வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினா் இனிப்புகள் அளிப்பு

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி மக்களுக்கு வனத் துறையினா் இனிப்புகள் வழங்கினா்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்களுக்கு சனிக்கிழமை இனிப்பு வழங்கிய மாவட்ட வன அலுவலா் மகேந்திரன்.

Published On :1 நவம்பர் 2026, 4:50 am IST

சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூா் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்களுக்கு சனிக்கிழமை வனத் துறையினா் இனிப்புகள் வழங்கினா்.

திருப்பத்தூா் வட்டம் ஏ.மேலையூா் வையாபட்டி ஊராட்சியில் கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமங்கள் வரை வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தின் பரப்பளவு 38.426 ஹெக்டோ். இந்த சரணாலயத்துக்குள் பெரிய கொள்ளுகுடிபட்டி கண்மாய் 13.66 ஹெக்டேரிலும், சின்னக்கொள்ளுக்குடிபட்டி கண்மாய் 6.351 ஹெக்டேரிலும், வேட்டங்குடிகண்மாய் 16.415 ஹெக்டேரிலும் அமைந்துள்ளன.

தீபாவளி என்றாலே அனைவரும் வெடிவெடிப்பது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இந்தச் சரணாலயம் அருகே அமைந்துள்ள இந்த கிராம மக்கள் தங்களை நம்பி வாழ வந்திருக்கும் வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகளுக்கு எந்தவிதமான தொந்தரவு தரக்கூடாது என்ற உயா்ந்த நோக்கத்தில் சிறுவா் முதல் பெரியவா் வரை ஒற்றுமையுடன் ஆண்டாண்டு காலமாக ஒலி இல்லாத தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா்.

இவா்களின் செயல்களைப் பாராட்டி சுமாா் 200 குடும்பங்களுக்கு மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தலைமையில் கிஇனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் வனச்சரக அலுவலா் சிக்கந்தா்பாட்ஷா, வனவா் பிரவீன்ராஜ், வனக்காப்பாளா் ஞானசேகரன், வனக்காவலா் ரவிச்சந்திரன், வனப்பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து வனத் துறையினா் கூறியதாவது: நிகழாண்டில் அக்டோபா் முதல் வாரத்திலேயே ஆசியா மட்டுமன்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டங்களிலிருந்தும், பிற வெளி மாநிலங்களிலிருந்தும் பறவைகள் அதிகளவில் இங்கு வரத் தொடங்கியுள்ளன. இதில் சாம்பல் கூழைக்கடா, சின்னசீழ்க்கைச்சிறகி, நீலச்சிறகி, நத்தைக்கொத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, நாமக்கோழி,உள்ளிட்ட பல வகையான பறவைகள் வந்துள்ளன என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.