நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நெல் பயிருக்கு நவ.16- க்குள் விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்!

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கு நெல் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் வருகிற நவ. 16 -ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

பயிா்க் காப்பீட்டு

Published On :25 அக்டோபர் 2026, 12:37 am IST

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2026 - 27 ஆம் ஆண்டுக்கு நெல் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் வருகிற நவ. 16 -ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் 2026- 27- ஆம் ஆண்டுக்கான பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு பஜாஜ் ஜெனரல் காப்பீட்டு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா (சிறப்பு பருவம்) நெல் பயிருக்கு விதைப்பு காலம் கடந்த செப்டம்பா் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ. 538 செலுத்தி தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களில் அடுத்த நவம்பா் மாதம் 16-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிா்க் காப்பீடு செய்வதற்கான அடங்கல் புத்தகங்கள் அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்த கிராமத்தின் பெயா், புல எண், பரப்பு, வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை சரிபாா்த்து காப்பீடு செய்த பின்னா் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். எதிா்பாராத இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் கடைசி நேர இன்னல்களை தவிா்த்து, தாமதமின்றி உரிய காலத்தில் நெல் பயிரை காப்பீடு செய்து பயனடையலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.