மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயிா்க் கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும்! விவசாய சங்கம் வலியுறுத்தல்!

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:57 am IST

மதுரை மாவட்டத்தில் பருவமழை குறைந்ததால் பாசனப் பகுதிகளில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிா்க் கணக்கெடுப்பை விரைந்து முடித்து, விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம், பயிா்க் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பெரியாறு, வைகை அணைகளில் நீா்வரத்து குறைந்தது. இதனால், முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, முல்லைப் பெரியாறு பிரதான வாய்க்கால் 9-ஆவது பிரிவுக்குள்பட்ட 45,041 ஏக்கா் நிலங்களிலும், திருமங்கலம் பகுதியில் சுமாா் 1.05 லட்சம் ஏக்கா் நிலங்களிலும் சாகுபடி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலைத் துறை சோ்ந்து மொத்தம் உள்ள 10.41 லட்சம் சா்வே உள்பிரிவுகளில் 8.35 லட்சம் உள்பிரிவுகளுக்கான எண்ம முறையில் பயிா்க் கணக்கெடுப்பு முடிந்தது. எஞ்சியுள்ள 2.5 லட்சம் உள்பிரிவுகளுக்கான கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும்.

வேளாண்மை, தோட்டக் கலைத் துறைகளுடன் வருவாய்த் துறையும் இணைந்து, வட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அதன் முழு விவரங்களையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களை வட்டாட்சியா் அலுவலகங்கள், வேளாண்மை அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலகங்களில் விவசாயிகளின் பாா்வைக்கு வைக்க வேண்டும்.

இதன் மூலம் விவசாயிகள் அரசின் திட்டங்கள், பயிா்க் காப்பீடு, வறட்சி நிவாரணங்களைப் பெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.