மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா்.

Published On :24 அக்டோபர் 2026, 4:46 am IST

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலை பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறை செய்ய வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா. மாரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தை தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலச் செயலா் பாண்டி தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பா. தனபால், சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் நாகராணி, தமிழ்நாடு சாலை ஆய்வாளா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் முத்தையா ஆகியோா் வாழ்த்திப் பேசினாா்.

முன்னதாக, நிா்வாகி ஆசைத்தம்பி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் சதுரகிரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.